தமிழக மத்திய அரசு நிறுவனங்கள்

1. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) - திருச்சி

தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology) 1964-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட அரசுப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகும். இந்தியா முழுவதும் அமைந்துள்ள 18 தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (National Institute of Technology) 1964-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட அரசுப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகும். இந்தியா முழுவதும் அமைந்துள்ள 18 தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.

1. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) - திருச்சி
2. இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) - சென்னை
3. மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) - சென்னை
4. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
5. மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
6. தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) - சென்னை
7. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்
(CECRI) - காரைக்குடி
8. காடு ஆராய்ச்சி நிறுவனம் - கோயம்புத்தூர்
9. சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனம் - கோயம்புத்தூர்
10. மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிலையம் - மண்டபம் கேம்ப்
11. இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) - திருச்சி (2011)

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது,

இது இந்தியாவில் அமைக்கப்பட்ட மூன்றாவது தொழிழ்நுட்பக் கழகமாகும். அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இது இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இது 1961-ஆம் ஆண்டு தேசிய முக்கிய கல்விக் கழகங்களில் ஒன்றாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இது 2009-ஆம் ஆண்டு தனது பொன்விழாவினைக் கொண்டாடியது. இதுவொரு உறைவிடக் கல்வி நிறுவனமாகும்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) - சென்னை

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், உலகின் மிகப்பெரிய தோல் ஆராய்ச்சி நிலையமாக 1940-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் நிறுவப்பட்டது.

தோல்துறையில் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, வடிவமைப்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் இந்நிலையம் இந்திய தோல்துறையின் முக்கிய மையமாக விளங்குகிறது.

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் - சென்னை

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 1956-ஆம் ஆண்டு காசநோய் வேதிசிகிச்சை மையத்தை சென்னையில் உருவாக்கியது.

இதுவே 1978-ஆம் ஆண்டு “காசநோய் ஆராய்ச்சி மையமாக" உருமாற்றம் செய்யப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது இது "தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையமாக " அறிவிக்கப்பட்டது.

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் - சென்னை

மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம் 1947-ஆம் ஆண்டு சென்னையில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் 1949-ஆம் ஆண்டு மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டது.

தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் (NIOT) - சென்னை

தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது சென்னையில் அமைந்துள்ளது. இந்திய அரசின் புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இது செயல்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பொதுநூலகம்

டாக்டர் அவிநாசிலிங்கம் கல்வி அமைச்சராக இருந்தபோது 1948 - இல் பொதுநூலகச் சட்டம் உருவாக்கப்பட்டது.

டாக்டர் அவிநாசிலிங்கம் கல்வி அமைச்சராக இருந்தபோது 1948 - இல் பொதுநூலகச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இச்சட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் 1950 ஏப்ரல் முதல் நாளன்று அமல்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பொது நூலகத் துறையும், பொதுநூலகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post