அரியலூர் மாவட்டத்தின் வரலாறு
1995-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2001 ஜனவரி 1 இல் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
மீண்டும் 2007-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் நாள் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 31 -ஆவது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அடிப்படைத் தகவல்கள் :
தலைநகர் - அரியலூர்
பரப்பு - 1,949.31 ச.கி.மீ.
மக்கள் தொகை :
2001 ஆம் ஆண்டு அன்று கணக்கெடுப்பின்படி 6,95,524. ஆக இருந்தது, 2011 ஆம் ஆண்டு அன்று எடுக்க மக்கள் தொகை எண்ணிக்கை 7,54,894 ஆக உயர்ந்துள்ளது.
ஆண்கள் : 374703
பெண்கள்: 380191
எல்லைகள் :
கிழக்கில் - நாகை மாவட்டம்.
மேற்கில் - பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள்.
வடக்கில் - கடலூர் மாவட்டம்.
தெற்கில் - தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்கள்.
நிர்வாகப் பிரிவுகள் :
வருவாய் கோட்டங்கள் : 2 - அரியலூர், உடையார்பாளையம்.
வட்டங்கள் : 4
உள்ளாட்சி அமைப்புகள் :
நகராட்சிகள் : 2
பேரூராட்சிகள் : 2
ஊராட்சி ஒன்றியங்கள் : 6
கிராம பஞ்சாயத்துகள் : 201
வருவாய் கிராமங்கள் : 195
நாடாளுமன்றத் தொகுதி :
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள் :
2 சட்டமன்றத் தொகுதிகள் - அரியலூர், ஜெயங்கொண்டம்.
விவசாயம் :
கரும்பு மற்றும் முந்திரி முக்கியப் பணப்பயிர்களாகும்.
முக்கிய ஆறுகள் :
கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
கனிம வளம் :
சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி போன்ற கனிமங்கள் நிறைந்த மாவட்டம்.
தொழில்வளம் :
அரசு சிமெண்ட், பிர்லா சிமெண்ட், சக்தி சிமெண்ட், டால்மியா சிமெண்ட், ராம்கோ சிமெண்ட் போன்ற சிமெண்ட் ஆலைகள், சர்க்கரை ஆலை, அனல் மின் நிலையம் போன்றவை இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்றன.
அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள் :
இது மிக அதிக (ஐந்து) சிமெண்ட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாவட்டம்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கரைப் பாலம் 150 வருட பழமையானது.
நெல்லிமண கிராமம் என்பதே ஜெயங்கொண்டத்தின் இயற்பெயராகும். இங்கு பழுப்பு நிலக்கரி அதிகளவில் காணப்படுகிறது.
மதுராந்தகத்தான் என்று அழைக்கப்பட்ட முதலாம் இராஜேந்திரச் சோழன், தனது வட இந்திய வெற்றியை கொண்டாடும் வகையில் "கங்கை கொண்ட சோழபுரம்” நகரை நிர்மானித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் :
திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலயம், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயில், வீரமாமுனிவரால் கட்டப்பட்ட ஏலக்குறிச்சி மாதா கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மேலப்பழவூர், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் போன்றவை முக்கிய வழிபாட்டு மற்றும் சுற்றுலாத்தலங்களாகும்.
இதுவே தமிழகத்தில் அதிகளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாவட்டமாகும். திருமழப்பாடியில் 750 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்தில் திருவள்ளுவருக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உலோகச் சிலையாகும்.
ஜெயங்கொண்டத்தில் டைனோசர்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொது பயன்பாடுகள் :
46 வங்கிகள் உள்ளன
6 கல்வி நிறுவனங்கள் உள்ளன
மின்சாரம் பகுமின் கழகம் 3 உள்ளது.
மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055
அரியலூர் மாவட்டத்தில் 11 - மருத்துவமனைகள் உள்ளன.
2 - அரசு சாரா நிறுவனங்கள் உள்ளது.
18 - காவல் நிலையங்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.
27- அஞ்சல் துறைகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளது.