தமிழக விமானப் போக்குவரத்து
தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவு வாயிலாக விளங்கும் சென்னையில் அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையமும், பெருந்தலைவர் காமராஜர் உள்ளூர் விமான நிலையமும் செயல்படுகின்றன.
பன்னாட்டு விமான நிலையம் :
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையம் அண்ணா விமான நிலையமாகும்.
இவ்விமான நிலையம் 19 நாடுகளுக்கான விமான போக்குவரத்து ஒரு வாரத்தில் 169-க்கும் மேற்பட்ட நேரடி விமானப் சேவை புரிகின்றது.
போக்குவரத்தை இது கையாளுகிறது. இந்தியாவில், மும்பை, டெல்லிக்கு பிறகு மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும்.
சென்னை சர்வதேச விமான நிலையம் 2009 - 10-இல் இந்தியாவின் மூன்றாவது பயணிகள் நெரிசல் மிகுந்த பரபரப்பான விமான நிலையமாக விளங்கியது. மேலும் இது சரக்குகளை கையால்வதில் இந்தியாவின் இரண்டாவது நெரிசலான விமான நிலையமாகும்.
ஸ்ரீபெரும்புதூரில் 4200 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை விமான நிலையம் (Greenfield Airport) கட்டப்படவுள்ளது.
உள்நாட்டு விமான நிலையங்கள் :
1. சென்னை (காமராஜர்)
2. மதுரை
3. சேலம்
4. தூத்துக்குடி
பன்னாட்டு விமான நிலையங்கள் :
1. சென்னை (அண்ணா)
2. கோயம்புத்தூர்
3. திருச்சிராப்பள்ளி