தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதி
தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அவை
1. சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி
2. காவிரி வண்டல் சமவெளி
3.தெற்குப் பகுதியிலுள்ள வறண்ட சமவெளி
சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி
சோழ மண்டலக் கடற்கரைச் சமவெளி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது. இச்சமவெளி திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
வடக்கில் செங்கம் கணவாயும், தெற்கில் ஆத்தூர் கணவாயும் இச்சமவெளியைப் பீடபூமியிலிருந்து பிரிக்கின்றன.
இதில் பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, ஆகிய நதிகளின் வடிகால்களும் அடங்கும். இச்சமவெளியிலுள்ள வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் ஆர்டிசன் நீருற்றுகள்' உள்ளன.
காவேரிச் சமவெளி
இச்சமவெளியில் காவிரி மற்றும் அதன் உபநதிகள் பாய்கின்றன. இதில் தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர். புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
வடக்கில் பச்சைமலை மற்றும் கொல்லி மலையும், தெற்கில் விராலிமலையும் இச்சமவெளியைப் பிரிக்கின்றன.
வறண்ட தென் சமவெளி
இவைகள் மலையடி வாரத்தில் உயர்ந்த பகுதிகளாகக் காணப்படுகின்றன. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
மன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் கிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் முருகைப்பார்கள் காணப்படுகின்றன.
தூத்துக்குடியில் கடற்கரைக்கு இணையாக 10 மீட்டர் உயரத்திற்கும் மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.