தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு:

தமிழ்நாடு இந்தியாவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமாகும். கிரேக்க மற்றும் மெசபடோமிய கலாச்சாரங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கு கலாச்சார வரலாறு உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள் (50,216 சதுர மைல்கள்) ஆகும். இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பளவு 4 சதவீதமாகும்.

தமிழ்நாடு இந்தியாவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமாகும்.

பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் 11-ஆவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாடு 8° 5' வட அட்சரேகை முதல் 13°35' வட அட்சரேகை வரையிலும், 76°15' கிழக்கு தீர்க்கரேகை முதல் 80°20' கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் பரவியுள்ளது.

தமிழகத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் கர்நாடகாவும், வடக்கில் ஆந்திரப்பிரதேசமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் இந்துமாக்கடலும் எல்லைகளாக உள்ளன.

குறிப்பு:

இலங்கை பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது.

தமிழக எல்லை முனைகள்

வடக்கு: பழவேற்காடு (புலிக்காட்) ஏரி

தெற்கு: கன்னியாகுமரி

கிழக்கு: கோடியக்கரை

மேற்கு: ஆனைமலைக் குன்றுகள்

இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடி முனையாக கன்னியாகுமரி அமைந்துள்ளது. இங்குதான் அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றும் கூடுகின்றன.

தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 3 -ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. (முதலாவது குஜராத், இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்).

தமிழகக் கடற்கரையானது 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது.

மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத் தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை :

1. மலைகள்

2. பீடபூமிகள்

3. சமவெளிப் பகுதிகள்

4. கடலோரப் பகுதிகள்

மலைப்பகுதி :

தமிழ் நாட்டின் மலைப்பகுதியை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். அவை: (அ) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்

(ஆ) கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

Previous Post Next Post