தமிழக நீர்ப்பாசனம் முறைகள்
தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் தீவிர தன்னிறைவு விவசாய முறையையே பின்பற்றுகின்றனர்.
பயிர்களின் நீர் தேவை மாறுபடுவதால் பாசன வசதியைப் பொறுத்தே தமிழ்நாட்டின் வேளாண்மை வளர்ச்சி அமைகிறது. தமிழகத்தில் கிணற்றுப் பாசனம், கால்வாய்ப் பாசனம், ஏரிப்பாசனம் ஆகிய பாசன முறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
தமிழக நீர்ப்பாசன ஆதாரங்களான அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றை பராமரிப்பது தமிழக பொதுப்பணித்துறையாகும். இது 1858-ஆம் ஆண்டு டல்ஹவுசி பிரபுவினால் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கிணற்றுப்பாசன முறை மிக அதிகளவில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் அதிக நிகர நீர்ப்பாசன பரப்பு பெற்றுள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் (2,43,141 ஹெக்டேர்) ஆகும்.
நிகர நீர்ப்பாசன பரப்பு சதவீதத்தில், திருவாரூர் மாவட்டம் (96.3%) முதலிடத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் (88.7%) இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மிகவும் குறைந்த நிகர நீர்ப்பாசன சதவீதம் பெற்றுள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டமாகும் (0.9%).
தமிழகத்தில் கிணற்றுப் பாசனம் அதிகமாக நடைபெறும் முதல் மூன்று மாவட்டங்கள்:
1. விழுப்புரம் - 11.40%
2. கோயம்புத்தூர் - 7.5%
3. திருவண்ணாமலை - 7%
தமிழகத்தில் கால்வாய்ப் பாசனம் அதிகமாக நடைபெறும் முதல் மூன்று மாவட்டங்கள்:
1. திருவாரூர் - 18.7%
2. தஞ்சாவூர் - 17.4 %
3. நாகப்பட்டினம் - 15.7%
தமிழகத்தில் ஏரிப்பாசனம் அதிகமாக நடைபெறும் முதல் மூன்று மாவட்டங்கள்:
1. சிவகங்கை - 12.7%
2. புதுக்கோட்டை - 12.5%
3. விழுப்புரம் & காஞ்சிபுரம் - 10.6 %
மொத்த நீர்ப்பாசன பரப்பில் 56.1% நெல் வயல்களும், 9.9% கரும்பு வயல்களும் 5.6 % நிலக்கடலை வயல்களும் பாசன வசதியைப் பெற்றுள்ளன, தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 நீர்ப்பாசன ஏரிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,62,11,391 தரைக்கிணறுகளும், 2,87,304 ஆழ்குழாய் கிணறுகளும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நீர் பாசன முறைகள் :
1. கிணற்றுப் பாசனம் - 52.6%, குழாய்க் கிணறு - 13.1%, திறந்த வெளிக்கிணறு - 39.5% வேலூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கிணற்றுப் பாசனம் மூலம் பயன்பெறுகின்றன.
2. கால்வாய் பாசனம் - 27.4% கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறுகின்றன.
3. ஏரிப் பாசனம் - 19.7% காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏரிப் பாசனம் மூலம் பயன்பெறுகின்றன.
4. மற்றவை - 0.3%