உலகத் தமிழ் மாநாடுகள்
உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழை வளப்படுத்த நடத்தப்படும் மாநாடே உலகத் தமிழ் மாநாடு ஆகும்.
தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு, டில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் இந்த தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.
இதுவரை மொத்தம் 8 உலகத் தமிழ் மாநாடுகள் நடைப்பெற்றுள்ளன. உலகத் தமிழாராய்ச்சி மன்றம், 9-ஆவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த அனுமதி வழங்காததால், தமிழக அரசு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தியது. 2010 ஜூன் 23-27 வரை முதலாவது “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு" கோவை நகரில் நடைப்பெற்றது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை குடியரசுத்தவைர் பிரதிபா பாட்டில் துவக்கி வைத்தார்.
முதலாவது உலகத் தமிழ் செம்மொழி விருது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் அஸ்கோ பார்போலாவிற்கு வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் மாநாடுகள்
முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: கோலாலம்பூர் 1966 - ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகரில் நடைபெற்றது.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: சென்னை 1968 - ஆம் ஆண்டு முதலமைச்சர் அண்ணாதுரை தலைமையில் நடைப்பெற்றது.
மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: பாரிஸ் 1970 - ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி சிறப்பு ஆற்றினார்.
நான்காவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: யாழ்ப்பாணம் 1974 - ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: மதுரை 1981 முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடத்தினார்.
ஆறாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: கோலாலம்பூர் 1987 - ஆம் ஆண்டு இரண்டாவதுமுறையாக மலேசியாவில் நடைபெற்றது.
ஏழாவது மாநாடு நடைபெற்ற இடம்: மொரீசஷியஸ் 1989 - ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் தீவில் நடைபெற்றது.
எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்: தஞ்சாவூர் - 1995 - ஆம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடத்தினார்.