தமிழ் திரைப்படம்
தமிழ்நாட்டின் முதல் திரைப்படம் (ஊமை படம்) கீசகவதம் (1916). இதை தயாரித்து வெளியிட்டவர் ஆர்.நடராஜ முதலியார். தமிழ்நாட்டின் முதல் பேசும் படம் காளிதாஸ் (1931).
எச்.எம்.ரெட்டி இயக்கிய இப்படம் பம்பாயில் தயாரிக்கப்பட்டது. 1934-இல் வெளியான லவகுசாவில் 63 பாடல்கள் இருந்தன. முதன் முதலில் சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தவர் இயக்குனர் கே.சுப்பிரமணியம்.
தமிழில் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த முதல் படம் ''பாலயோகினி". எம்.கே.தியாகராஜ பாகவதர் 1934-இல் "பவளக்கொடி" என்ற படத்தில் அறிமுகமானார்.
எம்.ஜி.ஆர் 1936-இல் "சதிலீலாவதி" என்ற படத்தில் அறிமுகமானார். சிவாஜிகணேசன் 1952-இல் “பராசக்தி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும்.
ஆஸ்கர் விருது பெற்ற முதல் தமிழர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனியர்” என்ற படத்திற்காக 2009-ஆம் ஆண்டு இவ்விருதினைப் பெற்றார். இவர் 1992-இல் 'ரோஜா' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
தமிழ்நாடு திரைப்பட பயிற்சி நிறுவனம் சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் பிலிம் சொஸைட்டி திருமதி அம்மு சுவாமிநாதன் அவர்களால் தொடங்கப்பட்டது.
திரைப்படத் துறையைச் சேர்ந்த முதல் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா. தாதா சாகிப் பால்கே விருது பெற்ற முதல் தமிழக நடிகர் சிவாஜி கணேசன் (1996). தேசிய விருது (பாரத் விருது) பெற்ற முதல் தமிழக நடிகர் எம்.ஜி.ஆர்.
மூன்று முறை தேசிய விருது பெற்ற தமிழக நடிகர் கமலஹாசன். (1. மூன்றாம் பிறை 2. நாயகன் 3. இந்தியன்)
திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகள்
(அரசு விருப்புரிமையின் அடிப்படையில்)
1. அண்ணா விருது - சிறந்த வசனகர்த்தாவுக்கு
2. கலைவாணர் விருது - சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
3. ராஜா சாண்டோ விருது - சிறந்த இயக்குநருக்கு
4. கவிஞர் கண்ணதாசன் விருது - சிறந்த பாடலாசிரியருக்கு
5. நடிகர் திலகம் சிவாஜி விருது - சிறந்த நடிகருக்கு
6.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.விருது - சிறந்த நடிகருக்கு
7. தியாகராஜ பாகவதர் விருது - சிறந்த இசையமைப்பாளருக்கு