வாஞ்சிநாதன் வாழ்க்கை வரலாறு (Vanchinathan)

வாஞ்சிநாதன் 1886-ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் ரகுபதி அய்யர் ருக்மணி அம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் சங்கரன்.

வாஞ்சிநாதன் 1886-ஆம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் ரகுபதி அய்யர் ருக்மணி அம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் சங்கரன்.

புதுச்சேரியில் தனது குருவான வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற வாஞ்சிநாதன், வ.உ.சி மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு காரணமான, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் துரையை மணியாச்சி இரயில் நிலையத்தில் 1911 ஜூலை 17-ஆம் நாள் சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சுப்பிரமணிய சிவா வாழ்க்கை வரலாறு (Subramaniya Siva)

சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் பிறந்தார். பிராமண குடும்பத்தில் பிறந்த சிவா கோவையில் தனது படிப்பை முடித்த பின்பு, சிவகாசி காவல் நிலையத்தில் எழுத்தராகச் சேர்ந்தார்.

சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் 1884-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் பிறந்தார். பிராமண குடும்பத்தில் பிறந்த சிவா கோவையில் தனது படிப்பை முடித்த பின்பு, சிவகாசி காவல் நிலையத்தில் எழுத்தராகச் சேர்ந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின் வ.உ.சிதம்பரனாரும், பாரதியாரும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1908-ஆம் ஆண்டு வ.உ.சி. உடன் இணைந்து தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் சிவா.

பின்னர் தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் பல இன்னல்களை அனுபவித்த சிவாவிற்கு தொழுநோய் தொற்றியது. சுப்பிரமணிய சிவா ஞானபானு, பிரபஞ்சமித்திரன், இந்திய தேசாந்திரி ஆகிய இதழ்களை வெளியிட்டார். சச்சிதானந்த சிவம், ஞானரதம் ஆகிய நூல்களை எழுதினார். சிவாஜி மற்றும் ராஜா தேசிங்கு ஆகிய நாடகங்களையும் வெளியிட்டார்.

“சுதந்திரானந்தா" என்ற புனைப் பெயரை சூட்டிக் கொண்ட சிவா தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் “பாரதி ஆசிரமத்தை" நிறுவினார். அங்கு தேசபக்தர்களுக்கு நாட்டு விடுதலைப் போருக்கான பயிற்சியளித்தார். பத்திராசல ஆசிரமத்தில் தங்கியிருந்த சிவா 1925-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் இறந்தார்.

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு (Bharathidasan)

கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். இவர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1891- ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார்.

கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். இவர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1891- ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார்.

குறிப்பு:

தந்தை பெரியார் அவர்கள் பாரதிதாசனுக்கு 'புரட்சிக்கவி' என்ற பட்டத்தை வழங்கினார். இவரின் பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

தமிழ்நாடு அரசு 1990-இல் இவரது படைப்புகளை பொதுவுடைமையாக்கியது. இந்திய அஞ்சல் துறையானது இவரது நினைவாக 2001 அக்டோபர் 9-ம் தேதி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. 

தமிழக அரசு இவரது நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழறிஞர்களுக்கு பாரதிதாசன் விருதைவழங்கி வருகிறது.

தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.

இவர் பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, இசையமுது, தமிழ் இயக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் 'குயில்' (1948) என்னும் மாத இதழை நடத்தி வந்தார். பாவேந்தர் என புகழப்பட்ட பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-இல் இயற்கை எய்தினார்.

திரு.வி.கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு

திரு.வி.க என சுருக்கமாக அழைக்கப்பட்ட திருவாரூர் விருத்தாசலம் கல்யாண சுந்தரனார். சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற கிராமத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் நாள் பிறந்தார். அரசியல், சமுதாயம், சமயம் என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர் சிறந்த மேடைப்பேச்சாளர் ஆவார்.

இவர் 1917 முதல் 1920 வரை 'தேசபக்தன்' நாளிதழின் ஆசிரியராக விளங்கினார். பின்னர் 1920-இல் 'நவசக்தி' என்ற வார இதழை வெளியிட்டார். 1921-ஆம் ஆண்டு பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடிக் ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தினார். 1925-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

அதில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை தந்தை பெரியார் அளித்தபோது அதை திரு.வி.க. ஏற்கவில்லை. இதனால் ஈ.வெ.ரா காங்கிரஸில் இருந்து விலகினார்.

1926-ஆம் ஆண்டு திரு.வி.க. காங்கிரஸில் இருந்து விலகினார். அதற்கு பின்னர் முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்த் தென்றல், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், புதுமை வேட்டல் போன்ற பல நூல்களை இயற்றினார். தமிழ்த் தென்றல் என அழைக்கப்பட்ட திரு.வி.க. 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19-ஆம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

1983-ஆம் ஆண்டு இவருடைய நூற்றாண்டு விழா தமிழக அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 2005 அக்டோபர் 21-இல், இந்திய அரசு, திரு.வி.க நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

இராஜாஜி வாழ்க்கை வரலாறு

இராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட சி. இராஜகோபாலாச்சாரி அப்போதைய சேலம் (தற்போதைய கிருஷ்ணகிரி) மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற ஊரில் டிசம்பர் 10, 1878-இல் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பண்முகம் கொண்ட இவர் சேலத்து மாம்பழம் என செல்லமாக அழைக்கப்பட்டார்.

சட்டக்கல்வி பயின்ற இவர், 1900 முதல் சேலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1917 முதல் 1921 வரை சேலம் நகரசபை தலைவராக பணியாற்றினார். 1921-இல் தீவிர அரசியலில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கும், கிலாஃபத் இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 1925-இல் திருச்செங்கோட்டில் 'காந்தி ஆசிரமம்' அமைத்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார்.

1930-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. 1937-இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், ஜூலை 17, அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.

இராஜாஜி தமது ஆட்சியின்போது மதுவிலக்குச் சட்டம். கைத்தொழில் பாதுகாப்புச் சட்டம், ஆலயப் பிரவேசச் சட்டம், விற்பனை வரி அறிமுகம் (1937), ஆரம்பப் பள்ளியில் இந்தி கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்துதல் (1938) போன்ற பல சீர்த்திருந்தச் சட்டங்களை இயற்றினார். 

1942-இல் பாகிஸ்தான் தனி நாடு கொள்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் 1944-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்து, முஸ்லீம்களுக்கு தனி நாடு தருவதே நல்லது என்ற தமது சி.ஆர் திட்டத்தை (C.R.Formula) காந்தியடிகளிடம் அளித்தார்.

இவர் 1946 முதல் 1947 வரை மேற்குவங்க ஆளுநரகப் பணியாற்றினார். இவர் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஜூன் 21, 1948 முதல் ஜனவரி 25, 1950 வரை பதவி வகித்தார்.

இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனால் ஆகிய சிறப்புக்குரியவர் இராஜாஜி. சுதந்திரத்திற்கு பிறகு 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், தமிழக மேலவையின் உறுப்பினர் என்ற தகுதியுடன் ஏப்ரல் 10, 1952-இல் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1953-ஆம் ஆண்டு இவர் அறிமுகப்படுத்திய குலக்கல்வி திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தோன்றியதால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இராஜாஜி 1959-இல் சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். 1966இல் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து, திக்கற்ற பார்வதி போன்ற பல நூல்களை எழுதிய இராஜாஜி டிசம்பர் 25, 1972-இல் இயற்கை எய்தினார்.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கர் (ஈ.வெ.ரா) வாழ்க்கை வரலாறு

தந்தை பெரியார் என பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி சமூக சீர்த்திருத்தவாதியாவார். ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கர் என்பதன் சுருக்கமே ஈ.வெ.ரா ஆகும். இவர் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர் சின்னத்தாயி தம்பதியரின் மகனாக 1879 - ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் பிறந்தார். பெரியாரின் தாய்மொழி கன்னடம் ஆகும். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர்.

1898-ஆம் ஆண்டு இவர் தமது 19-வது வயதில், 13-வயது கொண்ட நாகம்மையை மணந்தார். 1915-இல் அரசியலில் ஈடுபட்ட ஈ.வே.ரா, ஈரோட்டில் பிராமணரல்லாதோர் காங்கிரஸ் மாநாட்டை நடத்தினார். 1918-இல் ஈரோடு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1919-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.

1920-இல் ஒத்துழையாமை ஈ.வெ.ரா இயக்கத்தில் ஈடுபட்டார். 1921-இல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியார் தம் மனைவி நாகம்மை மற்றும் தமக்கை கண்ணம்மாள் ஆகியோருடன் ஈடுபட்டார். இந்த கள்ளுக்கடை மறியலின்போது, தன் சொந்த தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

1922-ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற திருப்பூர் கூட்டத்தில் அரசு பணிகளிலும், கல்வியிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

1924-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் நாள் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் அவர் ‘வைக்கம் வீரர்' என பாராட்டப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே அவர் பிராமணர் அல்லாதோரின் நலன் காக்க மே 2, 1924-இல் 'குடியரசு' என்ற தமிழ் வார இதழைத் தொடங்கினார். 1925-ஆம் ஆண்டு வ.வே.சு. ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்தார்.

நவம்பர் 1925 - இல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறத்ததால், பெரியர் காங்கிரஸில் இருந்து விலகினார்.

1925-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். 1929இல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது. அதில் சவுந்தரபாண்டியனார், குத்தூசி குருசாமி, மூவலூர் ராமாமிருதம் அம்மையார் போன்றோர் பங்கேற்றனர்.

1926-இல் 'திராவிடன்' பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1928 நவம்பர் 7-இல் Revolt என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். 1930 ஜனவரியில் "குடும்பக் கட்டுப்பாடு" பற்றிய புத்தகத்தை வெளியிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1933, மே 11 - இல் பெரியாரின் மனைவி நாகம்மை காலமானார். 1933-ஆம் ஆண்டு குடியரசு வார இதழ் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், 20.11.1933 அன்று 'புரட்சி' என்ற வார இதழைத் தொடங்கினார்.

1934-ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சியை ஆதரிக்க தொடங்கிய ஈ.வெ.ரா, ஜனவரி 12, 1934 - இல் 'பகுத்தறிவு' என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார். இதில் முதன் முதலாக எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். தமிழ் எழுத்துக்களில் 14 எழுத்துக்களை குறைத்தார்.

ஜூன் 1, 1935-இல் நீதிக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட 'விடுதலை' வார இதழை பெரியார் ஜனவரி 1, 1937 அன்று தினசரி செய்தித்தாளாக வெளியிட்டார். 1937-இல் இராஜாஜி அரசால் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து சிறை சென்றார்.

நவம்பர் 13. 1938 - இல் சென்னையில் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், ஈ.வெ.ரா - வுக்கு 'பெரியார்' எனும் பட்டம் வழங்கப்பட்டது.

இவர் டிசம்பர் 29, 1938 - இல் நீதிக்கட்சியின் தலைவரானார். இவர் 1939-இல் திராவிட இன ஒற்றுமை மாநாடு மூலம் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பினார்.

1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணாதுரையின் தீர்மானத்தின் படி, நீதிக்கட்சியின் பெயர் "திராவிடர் கழகம்"  என மாற்றம் செய்யப்பட்டது.

1949-இல் 70 வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். 1957-இல் சாதியை ஒழிக்க தேசப்பட எரிப்பு மற்றும் கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை நடத்தினார்.

குறிப்பு :

இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி 1970-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் நாள் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர்”, “தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்”, “சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை'', 'அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்” ஆகியவற்றின் எதிரி என்று பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. 1970-இல் 'உண்மை' என்ற மாதமிருமுறை இதழானது திருச்சியில் பெரியாரால் துவக்கப்பட்டது. இவர் 1970-இல் அனைவரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தை நடத்தினார்.

குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற பெரியார் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் தமது 95-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமத்தில் 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி குமாரசாமி நாடாருக்கும். சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

அவருக்கு குலதெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மையார் மட்டும் அவரை 'ராஜா'என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, காமராசு என்று ஆனது.

சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்ட காமராஜர் தன்னுடைய 16-ஆம் வயதில் காங்கிரஸின் உறுப்பினரானார். 1920 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.

1922-இல் நேரு தலைமையில் "இந்தியக் குடியரசு காங்கிரஸ்' என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்திப் புகழ்பெற்றார். 1930-ஆம் ஆண்டு இவர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியகிரகத்தில் பங்கேற்றதால் கைதுசெய்யப்பட்டு (கல்கத்தா அலிப்பூர் சிறையில் / பெல்லாரி) சிறையில் அடைக்கப்பட்டார்.

1946 முதல் 1952 வரை சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் காமராஜர் முதல்வராக பதவியேற்றார்.

1956-ஆம் ஆண்டு ஏழை, மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாக இலவச மத்திய உணவு திட்டம் கொண்டுவந்தார். பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் தான் மத்திய உணவு திட்டத்தை முதன்முதலாக காமராஜர் தொடங்கிவைத்தார்.

1960-ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இவரது ஆட்சியில் இலவச சீருடை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) தமிழக முதல்வராக இருந்த காமராஜர், 1963-ஆம் ஆண்டு கே-பிளான் (K-Plan) எனப்படும் காமராஜர் திட்டத்தை கொண்டுவந்தார். அத்திட்டப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும்.

அதன்படி, காமராஜர் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகி, பொறுப்பினை பக்தவக்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபட்டார்.

இவர் 1964-ஆம் ஆண்டு புவனேஸ்வர் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸின் தலைவரானார். இவர் 1964-ஆம் ஆண்டு மே 27-அன்று பிரதமர் நேரு இறந்ததும், லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.

குறிப்பு :

"இந்தியாவைக் காப்போம் - ஜனநாயகத்தைக் காப்போம் என்பது கர்மவீரரின் வேதவாக்கு. கர்மவீரர், கறுப்பு காந்தி, கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை, பெருந்தலைவர், ஏழைப்பங்காளி, கிங் மேக்கர் போன்றவை இவரது சிறப்புப் பெயர்களாகும்.

இவர் இறந்த பிறகு 1976-ஆம் ஆண்டு இவருக்க பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காமராஜரின் நினைவிடம், சென்னை கிண்டியில் 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் திறக்கப்பட்டது. அக்டோபர் 2, 2000 - இல் கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

பின்னர் ஜனவரி 10, 1966 - இல் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார். இதனால் காமராஜர் 'கிங் மேக்கர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் நின்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

1969-ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்ட போது காமராஜர் பழைய காங்கிரஸிலேயே (INC -O) இருந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காகவே தன் வாழ்வை அர்பணித்த காமராஜர், 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாறு

சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரராவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் 1887-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாள் பிறந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

சத்தியமூர்த்தி இவரது பேச்சாற்றல் திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919-ஆம் ஆண்டு மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட, காங்கிரஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது. இவர் இங்கிலாந்தில் இருந்த போது "தி இந்து” (The Hindu) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார்.

1930-ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோயிலில் இந்தியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். 1936-இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தியும், அவரது சீடர் காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1939-ஆம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவியுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

1942-ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத் தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் நாள் சென்னை பொது மருத்துவமனையில், சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார்.

குறிப்பு :

1944 ஆம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் இந்த நீர்த்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்" என இவரது பெயரையே வைத்தார். தீரர் என்றும், தீரர் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்பட்ட இவரின் நினைவாக 1987-ஆம் ஆண்டு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

Previous Post Next Post