காங்கிரஸ்

1937-இல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 214 இடங்களில் 159 இடங்களை வென்ற காங்கிரஸ், நீதிகட்சியிடமிருந்து. ஆட்சியைக் கைப்பற்றியது. 1937 ஜூலை 14-ஆம் நாள் இராஜாஜி முதல்வராக (பிரீமியர்) பதவியேற்றார். 1937-இல் விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்போரில் இந்தியாவை உட்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து.

1937-இல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 214 இடங்களில் 159 இடங்களை வென்ற காங்கிரஸ், நீதிகட்சியிடமிருந்து. ஆட்சியைக் கைப்பற்றியது.

1939-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் நாள் இராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இரண்டாம் உலகப்போரால் ஏற்பட்ட நெருக்கடி நிலையினால் 1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை சென்னை மாகாணத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்றது.

டி.பிரகாசம்:

1946 ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1946 ஏப்ரல் 30 ஆம் நாள் டி.பிரகாசம் முதலமைச்சரானார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 1947 மார்ச் 23 ஆம் நாள் டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை பதவியிழந்தது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்:

1947 மார்ச் 23 அன்றே காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் புதிய பிரீமியராக (முதலமைச்சர்) பதவியேற்றார். அன்று முதல் ஏப்ரல் 6, 1949 வரை இவரே முதல்வராகத் தொடர்ந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புனித ஜார்ஜ் கோட்டையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் சுதந்திரத் திருநாள் கொண்டாடப்பட்டது. இவரே சுதந்திரத் திருநாளைக் கொண்டாடிய முதலாவது தமிழக முதல்வராவார்.

இவரது ஆட்சியில் 1948 - இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. 1949 ஏப்ரல் 6 முதல் 1950 ஜனவரி 26 வரை பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிகாரத்திலிருந்தது.

இராஜாஜி:

தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டபடியான முதல் பொதுத்தேர்தல் 1952 மார்ச்சில் நடைபெற்றது. மாணிக்க வேலரின் பொதுநலக்கட்சி (Commonweal Party) மற்றும் உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ராமசாமி படையாச்சி ஆகியோரது ஆதரவுடன் 1952 ஏப்ரல் 12-இல் இராஜாஜி முதலமைச்சரானார். 1953 அக்டோபார் ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம் உதயமானது.

ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பணியாற்றினார். 1953-ஆம் ஆண்டு இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து 1954 ஏப்ரல் 13-இல் இராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜர்:

இராஜாஜிக்கு பிறகு 1954 ஏப்ரல் 13 முதல் 1963 அக்டோபர் 2-ஆம் நாள் வரை காமராஜர் தமிழக முதல்வராக அரும்பணியாற்றினார். 1956 – இல் காமராஜர் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கினார். 1958-இல் தொழிலாளர் கூலி நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டது.

1955- இல் எட்டயபுரத்தில் இலவச மத்திய உணவுத் திட்டத்தை துவக்கினார் காமராஜர். 1955-இல் சென்னை குத்தகை சாகுபடியாளர்களின் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1955-இல் விவசாய வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டது. 1956 - இல் இயற்றப்பட்ட சென்னை குத்தகை சாகுபடியாளர்கள் (நியாயமான குத்தகை செலுத்துதல்) சட்டம், நியாயமான குத்தகையை நிர்ணயம் செய்தது. 1958 - இல் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.

1961-இல் சென்னை நில சீர்த்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இது நில உச்ச வரம்பை 30 ஏக்கராக நிர்ணயித்தது. 1961 பிப்ரவரி 24-இல் சட்டப்பேரவையில் “அரசாங்க நிர்வாக கடிதப் போக்குவரத்தில் மெட்ராஸ் ஸ்டேட்" என்பதை இனி "தமிழ்நாடு" என்று எழுதப்படும் என அரசு அறிவித்தது. 

1963- இல் காமராஜர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக “காமராஜர் திட்டம்' (K - Plan or Kamaraj Plan) கொண்டு வந்தார். அத்திட்டப்படி காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்கு திரும்பினார். 

பக்தவத்சலம்:

காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்றவர் எம்.பக்தவத்சலம் ஆவார். இவர் 1963 அக்டோபர் 2 முதல் 1967 மார்ச் 6 வரை முதல்வராக பதவி வகித்தார்.

இவரே காங்கிரஸ் கட்சியின் கடைசி தமிழக முதலமைச்சராவார். இவரது ஆட்சிக் காலத்தில் "இந்தி எதிர்ப்புப் போராட்டம்" தமிழகம் முழுவதும் பரவியது.

Previous Post Next Post