முல்லா கதை
ஒரு நாள் துருக்கி அரண்மனைப் மன்னனும் முல்லாவும் பழத்தோட்டதில் உலாவிக் கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி 'முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே!" என்று கேட்டார்.
"அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார். "சரி, இப்போது நீர் என்னை உமது மனத்தில் எடைபோட்டுப் பார்த்து என்னுடைய உண்மையான மதிப்பு என்ன என்று கூறும் பார்க்கலாம் "என்று" மன்னர் கேட்டுக் கொண்டார்.
முல்லா மன்னரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அடக்கமான குரலில் மன்னர் பெருமான் அவர்களே தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்தான்" என்றார். "மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. முல்லா தன்னை வேண்டுமென்றே அவமரியாதை செய்கிறார்" என்று ஆத்திரப்பட்டார்.
"என்னை நீர் எவ்வளவு கேவலப்படுத்தி விட்டீர் தெரியுமா? என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பே பத்துப் பொற்காசுகள் இருக்குமே" என்ற சீற்றத்துடன் கேட்டார். முல்லா சீற்றம் அடையாமல் "மன்னர் பிரான் அவர்களே நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். தனிப்பட்ட உங்கள் உடலுக்கு ஒரு காசுகூட மதிப்புப் போட முடியாது இது உங்களைப் பற்றி மட்டும் கூறப்படுவது அல்லா.
இந்த உடல் எத்தனை காலம் இந்த உலகில் நடமாட முடியும். உடலிருந்து உயிர் அகன்ற விட்டல் மன்னர் என்ற முறையில் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்குமா? அப்படிப்பட்ட அழிவும் ஒரு பொருளான உடம்புக்கு என்ன மதிப்பு இருக்க முடியுமா?" என்று முல்லா பதில் அளித்தார். முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரின் ஆத்திரத்தை அடக்கி அவரைச் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல செய்தி!
அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்.
ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஓர் இடத்தில் நின்று கொண்டு "அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் " என்று கூச்சல் போட்டார்.
முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறாார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர். அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..