புரட்சிக்கான காரணங்கள்
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகத் தோன்றிய முதல் புரட்சி பாளையக்காரர் புரட்சியாகும். தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்கள் தோன்றினர். பாளையக்காரர்கள், பாளையம் அல்லது பெரிய நிலப்பரப்பிற்கு உரிமையாளர்கள் ஆவர்.
Also Read : தமிழகத்தில் இந்திய தேசிய இயக்கம்
திருநெல்வேலியின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த பாளையக்காரர்கள் மறவர்கள் என்றும், கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பாளையக்காரர்கள் நாயக்கர்கள் அழைக்கப்பட்டனர். என்றும் மேற்குப் பகுதியினர் புலித்தேவன் கட்டுப்பாட்டிலும், கிழுக்குப் பகுதியினர் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டிலும் வாழ்ந்து வந்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மொகலாயர்கள் தென்னிந்தியாவில் தங்களுடைய மேலாண்மையை ஏற்படுத்தினர்.
ஆற்காட்டை ஆண்ட நவாப்பு மொகலாயர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார். ஆனால் பாளையக்காரர்களிடம் முறையாக வரி வசூல் செய்ய முடியாததினால் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் கடன் பெற்றார்.
கி.பி.1792-ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் ஆற்காட்டு நவாப்போடு ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டது. அதன்படி பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. பாளையக்காரர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.
1792-ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் விளைவாக 1799-ஆம் ஆண்டு பாளையக்காரர் புரட்சி வெடித்தது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த பாளையக்காரர்களில் முக்கியமானவர்கள் புலித்தேவன், கட்டபொம்மன் மற்றும் மருதுபாண்டியர் ஆவர்.
Also Read : தென்னிந்தியப் புரட்சி (கி.பி.1800-கி.பி.1801)
புலித்தேவன்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை, தமிழகத்திலிருந்து முதன் முதலில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நெற்கட்டும் எதிர்த்தவர் புலித்தேவன் ஆவார். இவர் செவ்வல் என்ற பாளையத்தின் ஆட்சியாளராவார். ஆங்கிலேயருக்கும், ஆற்காடு நவாப்பிற்கும் கப்பம் கட்ட மறுத்த புலித்தேவன் அவர்களை எதிர்க்கவும் செய்தார்.
இதனால் ஆங்கிலேயர் மற்றும் நவாப்பின் படைகள் புலித்தேவனை தாக்கின. இருவரின் படைகளையும் புலித்தேவன் திருநெல்வேலி என்ற இடத்தில் வென்றார். இந்த வெற்றிக்குப் பின் புலித்தேவன் பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட முயன்றார். ஆனால் சிவகிரி, எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி கிய ஆ பாளையக்காரர்கள் புலித்தேவனுக்கு ஆதரவு அளிக்கவில்லை. 1759-ஆம் ஆண்டு யூசப்கான் என்கிற கான்சாகிப் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவ்வலைத் தாக்கின. அதில் அந்தாநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் புலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார்.
உயிர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்த புலித்தேவன், கான் சாகிப்பின் மறைவிற்கு பிறகு 1764-ஆம் ஆண்டு நெற்கட்டும் செவ்வல் பகுதியை மீண்டும் கைப்பற்றினார். ஆனால் 1767-ஆம் ஆண்டு கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்ட புலித்தேவனின் கடைசி நாட்களைப் பற்றி தெளிவாக அறிய முடியவில்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன்
கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்தில் குடியேறினார்கள். பாண்டிய பேரரசின் கீழ் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், நிலமானியதாரராக வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்தார். பாஞ்சாலங் குறிச்சி அதன் தலைநகராக விளங்கியது. நாயக்கர் காலத்தில் இவர் பாளையக்காரராக செயல்பட்டார். இவரின் மறைவிற்குப் பிறகு, இவரது மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆனார். வீரபாண்டிய கட்டபொம்மன் 1761-ஆம் ஆண்டு பாஞ்சாலங் குறிச்சியில் பிறந்தார்.
இவர் 1790-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார். இவரின் சகோதரர் ஊமைத்துரை, மனைவி ஜெக்கம்மாள் ஆவார்கள். ஆங்கிலேயரின் வரி வசூல் கொள்கையே, ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்குமிடையே விரோதம் ஏற்படக் காரணமாகும். இராமநாதபுர ஆட்சியர் கொலின் ஜாக்சன் தம்மை நேரில் சந்தித்து வரி பாக்கியை கட்டுமாறு கட்டபொம்மனுக்கு ஆணையிட்டார். 1798-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கட்டபொம்மனும் அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையும் இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்கவிலாஸ் என்ற இடத்தில் ஆட்சியரை சந்தித்தனர்.
Also Read : தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி
ஆட்சியர் அவர்களை அவமதித்ததுடன் சிறைபிடிக்க முயன்றார். இதில் கட்டபொம்மன் தனது தம்பி ஊமைத்துரையின் உதவியுடன் தப்பினார். ஆனால் அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியப்பிள்ளை மட்டும் சிறைபிடிக்கப்பட்டார். தமது அமைச்சரை விடுவிக்க கட்டபொம்மன், ஆட்சியர் ஜாக்சனின் செயல்பாடு குறித்து சென்னை கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார்.
சென்னை கவுன்சிலின் ஆளுநர் எட்வர்டு கிளைவ் கட்டபொம்மனை சரணடையச் சொன்னதுடன், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையையும் விடுவித்தார். மேலும் ஆட்சியர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்தார். எட்வர்டு கிளைவ் நியமித்த கமிஷன் முன்னிலையில், கட்டபொம்மன் 1798-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் சரணடைந்தார். மருதுபாண்டியர்கள் தனது அண்டை பாளையக்காரர்களுடன் இணைந்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார்கள். இந்தக் கூட்டணியில் சேர கட்டபொம்மனுக்கு விருப்பம். ஆனால் ஆட்சியர் லூஷிங்டன், கட்டபொம்மன் மருதுசகோதரர்களைச் சந்திப்பதை தடை செய்தார்.
சிவகிரி பாளையத்தை கூட்டமைப்பில் சேர்த்திட கட்டபொம்மன் முயன்றார். ஆனால் சிவகிரி பாளையம் கூட்டணியில் சேர மறுத்துவிட்டது. இதனால் கோபம் கொண்ட கட்டபொம்மன் சிவகிரி பாளையத்தின் மீது படையெடுத்தார். சிவகிரி பாளையம் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டுவதால் ஆங்கிலேய படைகள், திருநெல்வேலி மீது படையெடுத்தன. 1799-ஆம் ஆண்டு மே மாதம், வெல்லெஸ்லி பிரபு கட்டபொம்மனுக்கு எதிராக மேஜர் பேனர்மேன் தலைமையில் ஆங்கிலப் படை ஒன்றை அனுப்பினார்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பற்றிய தகவல்களை இராமலிங்க முதலியார் பேனர்மேனுக்கு வழங்கினார். இத்தகவல்களைக் கொண்டுதான் மேஜர் பேனர்மேன் போர் வியூகம் வகுத்தார். காளார்பட்டி என்ற இடத்தில் நடந்த மோதலில் பாஞ்சாலங்குறிச்சி தோல்வியடைந்தது. அமைச்சர் சிவசுப்பிரமணியம் பிள்ளை சிறைபிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் தலைமறைவானார். களப்பூர் காட்டில் ஒளிந்திருந்த கட்டபொம்மனை, புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் சிறைபிடித்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைத்தார். பிறகு பேனர்மன் சிறைக் கைதிகளை சகப்பாளையக்காரர்கள் முன்னிலையில் விசாரணை செய்து தண்டனை வழங்கினார்.
1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கயத்தாறு கோட்டையில் மற்ற பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். இதன் மூலம் பாளையக்காரர்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. ஆனால் அழிக்கப்படவில்லை.
Also Read : தமிழகத்தில் ஐரோப்பியர் ஆட்சி-Tamil Historical