தமிழகத்தின் சங்க காலம்:

சங்கம் என்ற சொல்லுக்கு கழகம் என்பது பொருள், தமிழக வரலாற்றில் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலமே சங்க காலம் எனப்படுகிறது, சங்க காலம் தமிழக வரலாற்றின் பொற்காலம் எனப்படுகிறது. இது கி.மு. மூன்றாம் நூாற்றாண்டுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும். சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் சான்றுகள் மற்றும் அயல்நாட்டவரின் குறிப்புகள் போன்றவை சங்க காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும்.

சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.

எடுத்துக்காட்டு: தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஆகியன சங்க இலக்கியங்களாகும். இவற்றில் தொல்காப்பியம் மிகவும் தொன்மையானதாகும். அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் மற்றும் காரவேலனின் அதிகும்பா கல்வெட்டு தமிழக அரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ள கழுகுமலைக் கல்வெட்டுகள் பயன்படுகின்றன. திருக்கோவிலூர் கல்வெட்டு குறுநில மன்னர்களைப் பற்றியும் கபிலரின் துயரமான முடிவைப் பற்றியும் கூறுகிறது. 

புகலூருக்கு அருகிலுள்ள ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டு மன்னர்களைப் பற்றி கூறுகிறது. திருப்பரங்குன்றத்து கல்வெட்டுகள் சமணத் துறவிகளுக்கு கற்படுக்கைகள் கொடையாக வழங்கப்பட்டதைக் கூறுகின்றது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் அகழாய்வுகளை மேற்கொண்டு இரும்பு, வெண்கலம் மற்றும் தங்கத்தினாலான பல பொருட்களைக் கண்டறிந்தார். 

புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் துப்ரேல் மற்றும் மார்டிமர்வீலர் ஆகியோர் அகழாய்வு செய்தனர். அப்போது ரோமானிய மட்பாண்டங்கள், நாணயங்கள், கண்ணாடிக் குவளைகள், இரத்தினங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சங்க காலத் தமிழகத்திற்கும் ரோமானியப் பேரரசிற்கும் இடையே நிலவிய வாணிகத் தொடர்புகளை இவை உறுதிபடுத்துகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் கீழையூர் என்ற இடத்தில் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த புத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்ககாலத் தமிழ் மன்னர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். தங்கம் மற்றும் வெள்ளியினாலான ரோமானிய நாணயங்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

கிரேக்க எழுத்தாளரான மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூல் தமிழ் அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. ஸ்ட்ராபோ, பிளினி, தாலமி, யுவான் சுவாங் போன்ற ஆசிரியர்களும் சங்க காலத்தைப் பற்றிய பல அரிய தகவல்களை அளித்துள்ளனர். இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியன சங்கத்தின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படுகின்றன. சங்க காலத்தில் முதற்சங்கம், இடைச்சங்கம், 

கடைச்சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் செயல்பட்டதாகவும், காலப்போக்கில் கபாடபுரத்திலும் அப்பகுதிகள் இந்துமாக்கடலில் மூழ்கிவிட்டதாகவும் கருதப்படுகிறது. பாண்டிய மன்னன் முடைத்திருமாறன் மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். இதுவே கடைச்சங்கம் எனப்படுகிறது. நாம் அறியும் சங்க காலம் இதுவேயாகும். நமக்கு கிடைத்துள்ள சங்க இலக்கியங்கள் இக்காலத்திலேயே படைக்கப்பட்டன.

சங்க கால அரசுகள் :

சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.

சங்க காலத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழகத்தில் சிறப்புடன் ஆட்சி செய்தனர். இவர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சங்க காலத்தில் இருந்தனர். 

சேர அரசு காலம் :

சங்க காலச் சேரநாடு தற்கால கேளரப் பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. இவர்களின் தலைநகரம் வஞ்சி, துறைமுகம் தொண் என்பதாகும். சேரர்களின் கொடியில் வில் அம்பு சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. சங்ககாலச் சேரர்கள் வானவர், வில்லவர், மலையர் என்று பல பட்டப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். சங்க காலச் சேர அரசில் முதலாவதாக உதியன் சேரலாதன் மரபும் இரண்டாவதாக இரும்பொறை மரபும் சேர நாட்டை ஆட்சி புரிந்தன. சங்க காலச் சேர மன்னர்களில் தலை சிறந்தவர் செங்குட்டுவன் ஆவார். பதிற்றுப்பத்தும் அகநானூறும் செங்குட்டுவனைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. 

செங்குட்டுவனுடைய போர் வெற்றிகளைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது. செங்குட்டுவன் இமயம் வரை படையெடுத்துச் சென்று இமயத்தில் விற்கொடியை நாட்டினார். பின்னர் அங்கிருந்து கற்களைக் கொண்டு வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் அமைத்து தமிழகத்தில் பத்தினி வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். செங்குட்டுவனின் இளவலான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். சேரலாதன் பெரும் சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை ஆகியோர் புகழ்மிக்க சேரமன்னர்களாவர்.

குறிப்பு:

சேர மன்னர்களின் பட்டப்பெயர்கள் :

செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்ததால்)
நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்

சோழ பேரரசு காலம் :

சங்ககாலச் சோழ நாடு தற்போதைய தஞ்சை திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. சோழ நாடு காவிரி நாடு, காவிரி சூழ்நாடு, நீர்நாடு மற்றும் புனல் நாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. சங்க காலச் சோழர்களின் தலைநகலம் உறையூர், துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம் சோழர்களின் இரண்டாவது தலைநகரமாகவும் விளங்கியது. சோழர்களின் சின்னமாக புலி விளங்கியது. கிள்ளி, வளவன், சென்னி, சோழன் ஆகிய பெயர்களைத் தாங்கிய சோழ மன்னர்களைப் பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

சங்க காலச் சோழர்களில் கரிகாலன் புகழ்மிக்கவனாக விளங்கினான். கரிகாலன் காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியதுடன் புகார் நகரத்தை இரண்டாவது தலைநகரமாகவும் அறிவித்தான். சங்க காலத்தில் புகார் நகரம் சிறந்த வாணிப நகரமாகத் திகழ்ந்தது. சங்க காலச் சோழர் ஆட்சி கோச்செங்கணான் காலத்தோடு முடிவுக்கு வந்தது.

பாண்டிய அரசு காலம் :

சங்க கால பாண்டிய அரசு மதுரை, திருநெல்வேலி, இராமாநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. - மதுரை பாண்டியர்களின் தலைநகரமாகவும், கொற்கை துறைமுக நகரமாகவும் விளங்கின. மீன் பாண்டியர்களின் சின்னமாக விளங்கியது. பாண்டிய மன்னர்கள் மாறன், வழுதி, செழியன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். பாண்டியர்கள் தமிழைப் போற்றி வளர்த்ததால், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் தலைநகரமாக மதுரை விளங்கியது எனக் கூறலாம். 

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பல வேள்விகளைச் செய்ததால் "பல்யாக சாலை" என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். பூதப்பாண்டியன் என்ற மன்னன் சிறந்த வீரனாகவும், வள்ளலாகவும் விளங்கினான். அவனது மனைவி பெருங்கோப் பெண்டு சிறந்த பெண்பாற் புலவராவார். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னனே கோவலனுக்கு தவறாக தண்டனை வழங்கியவன்.

தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்சேழியன், தலையாலங்கானம் என்ற இடத்தில் சேர, சோழ மற்றும் குறுநில மன்னர்களின் கூட்டுப்படைகளை முறியடித்தான்.

குறுநில மன்னர்கள் காலம் :

மூவேந்தர்களைத் தவிர தமிழகத்தில் பல குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்தனர். அவர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர். வேளிர்களில் மிகச் சிறந்தவர்களான பாரி, காரி, ஓரி, ஆய், நள்ளி, எழினி, பேகன் ஆகியோர் கடையெழு வள்ளல்கள் ஆவர்.

Previous Post Next Post