தமிழகத்தின் புவியியல் அமைவிடமும் மற்றும் அதன் பரப்பளவும்:
தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1.3 லட்சம் ச.கி.மீ. இந்தியாவின் மொத்தப் பரப்பில் சுமார் 4 சதவீதம் தமிழ்நாடு பெற்றுள்ளது. பரப்பளவு வரிசையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வரிசை எண் 11. இந்திய மாநிலங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் 7. தமிழ்நாடு 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தென் எல்ல 8.5° வட அட்ச ரேகை. தமிழ்நாட்டின் வடஎல்லை 13.35° வட அட்சரேகை. தமிழ்நாட்டின் கிழக்கு எல்லை 76.15° கி. தீர்க்கரேகை தமிழ்நாட்டின் மேற்கு எல்லை 80.20° கி. தீர்க்க ரேகை தமிழ்நாடு என்று சென்னை மாநிலத்திற்குப் பெயரிட்ட நாள் 1969 ஜனவரி 14. சென்னை மாநிலம் மொழிவாரி மாநிலமான நாள் 1.11.1956. தக்காண பீடபூமி தமிழ்நாட்டில் கிழக்குப் பகுதியில் உள்ளது கிழக்குத் தொடர்ச்சி மலை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் நீலகிரியிலிருந்து தெற்கில் கன்னியாக்குமரி வரை பரவி உள்ளது.
பழனி மலைகளுக்குத் தெற்கில் ஏலக்காய் மலைகள் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் சேருமிடம் நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா. நீலகிரியின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2642 மீ). நீலகரியிலுள்ள மலை வாழிடங்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய் பாலக்காட்டுக் கணவாய். அதன் முக்கியத்துவம் கொச்சி, கள்ளிக்கோட்டையுடன் வாணிபம். தேக்கடி சரணாலயம் பெரியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
பழனி மலையின் கோடை வாழிடம் கொடைக்கானல். தமிழ்நாட்டின் முக்கியமான பீடபூமிகள் கோயம்புத்தூர் பீடபூமி. தர்மபுரி அல்லது பாராமால் பீடபூமி. தமிழ்நாட்டின் சமவெளியின் பெரும்பகுதி கிழக்காகப் பாயும் ஆறுகளின் வண்டலால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை சோழ மண்டலக் கடற்கரை. சோழ மண்டலக் கடற்கரையின் வடக்கு எல்லை சென்னை,
தெற்கு எல்லை தென்ஆற்காடு மாவட்டம். வேலூர் மாவட்டத்தில் முக்கியமாகப் பயிரிடப்படுவது நிலக்கடலை. தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான குன்றுகள் ஜவ்வாது, சேர்வராயன், கல்ராயன், கொல்லிமலை, பச்சைமலை, கொங்குநாடு என்பது தற்போது உள்ள கோவை, பெரியார். சேலம் மாவட்டங்கள். கொங்கு நாட்டிலுள்ள ஆறுகள் காவேரி, அமராவதி. தமிழ்நாட்டின் வறண்ட தென்மேற்குப் பகுதி மாவட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி. தென்மேற்குப் பகுதியில் ஓடும் ஆறு தாமிரபரணி. தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதி மழை மறைவுப் பிரதேசம்.
பருத்திப் பயிரிட ஏற்ற கரிசல் மண் தமிழ்நாட்டில் தாமிரபரணி பள்ளத்தாக்குப் பகுதியில் மிகுந்துள்ளது. இயற்கை அமைப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டை மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் என மூன்றாகப் பிரிக்கலாம். கேரளாவைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் இரு கணவாய்கள் செங்கோட்டைக் கணவாய், ஆரல்வாய்க் கணவாய்.
தக்காணப் பீடபூமியின் பெரும்பாலான ஆறுகள் ஓடும் திசை மேற்கில் இருந்து கிழக்குப் பகுதியில் பாயும். நீலகரியிலிருந்து தர்மபுரி வரையிலும் உள்ள பகுதியில் அமைந்துள்ள பீடபூமி கோயமுத்தூர் பீடபூமி. கோயமுத்தூர் பீடபூமியில் ஓடும் ஆறுகள் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளான பவானி, நொய்யல் அமராவதி. காவிரியின் மிகப் பெரிய கிளை நதி கொள்ளிடம் ஆகும். தமிழ்நாட்டில் இயற்கைத் துறைமுகம் எதுவுமில்லை.
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் முதலிடத்தையும், காஞ்சி மாவட்டம் இரண்டாமிடத்தையும் பெறுகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு இவை வறண்ட நிலப்பகுதியில் பயிரிடப் படுகின்றன. சோளம் கோயமுத்தூர் பீடபூமி, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கியமாகப் பயிரிடப்படும் பருப்பு வகைகள் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு.
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன. நார்ப் பயிருக்கு உதாரணம் பருத்தி. கோயமுத்தூர் பீடபூமி, வைகை வைப்பார் பகுதி ஆகிய பகுதிகளில் பருத்தி விளைச்சல் மிகுதி. தமிழ்நாடு கரும்பு மகசூலில் முதலிடம் வகிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் சூரியகாந்தி எனும் எண்ணெய் வித்து பல இடங்களில் பயிரிடப்படுகிறது. தேயிலை நீலகரி மாவட்டத்தின் முக்கியப் பயிர் ஆகும். பழைய பாய்ச்சல் முறை என்பது கிணற்றுப் பாய்ச்சல்.
தமிழகத்தின் கனிம வளங்கள் :
நமது மாநிலத்தின் மிக முக்கியமான கனிம வளம் பழுப்பு நிலக்கரி, லிக்னைட் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. நமது மாநிலத்தில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி ஆண்டொன்றுக்கு 12 மில்லியன் டன்கள் ஆகும். பழுப்பு நிலக்கரிக்கு அடுத்தப்படியாக மிக அதிகம் கிடைக்கும் கனிமம் சுண்ணாம்புக்கல் ஆகும். சுண்ணாம்புக்கல் சிமென்ட் உற்பத்திக்கு மிகவும் தேவையான ஒன்று. அலுமினியத்தின் தாது பாக்ஸைட் ஆகும். இது சேலம் மாவட்டத்தில் மிகுதியாக கிடைக்கிறது. ஜிப்சம் உப்பு சிமென்ட் உற்பத்தியல் பெரும் பங்கு வகிக்கிறது.
உப்பு தயாரிக்கும் தொழில் மிகுந்துள்ள பகுதிகள் வேதாரண்யம் தூத்துக்குடி இந்தியாவில் உப்பு தயாரித்ததில் தமிழ்நாட்டுக்கு 2 வது இடம். சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்ச மலை பகுதியில் இரும்புத் தாது கிடைக்கிறது. தமிழ்நாட்டு இரும்புத் தாது மாக்னைட் வகையைச் சேர்ந்தது. கருங்கல்லின் சிதைந்த வடிவமான கிரானைட் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கிறது. தமிழ்நாட்டின் காவிரிப் படுகையில் பெட்ரோலியம் கிடைக்கிறது. நாகை மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் எரிவாயு கிடைக்கிறது. ஒரு பெரிய பெட்ரோலியத் தொழில் தொகுதி பனங்குடியில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தொழில்வளம் :
இந்தியாவிலேயே நெசவு உற்பத்தியில் தமிழ்நாடு 3 வது இடம் பெறுகிறது. கோயமுத்தூர் நகரில் பருத்தி நெசவாலைகள் செறிந்துள்ளன. கோயமுத்தூரில் பருத்தி நெசவாலைகள் மிகுந்திருக்கக் காரணம் பைக்காராவிலிருந்து கிடைக்கும் மலிவான மின்சாரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என கோயமுத்தூர் அழைக்கப்படுகிறது. பனியன் தொழிற்சாலைகள் திருப்பூர் மாவட்டத்தில் மிகுந்துள்ளன.
பட்டு தயாரிக்கும் ஆலைகள் தமிழ்நாட்டின் ஆரணி, காஞ்சிபுரம், கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. விண்ணமங்கலம், ஆத்தூரல் பகுதிகளில் கம்பளி நெசவு ஆலைகள் அமைந்துள்ளன.
செயற்கை இழை (விஸ்கோஸ்) தொழிற்சாலை அமைந்துள்ள இடம் சிறுமுகை (கோவை அருகில்). தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிலால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் அடையாறு. மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத்தின் சுருக்கமான ஆங்கிலக் குறியீடு CLRI சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தோல் பதனிடும் ஆலைகள் உள்ளன. அரியலூர், டால்மியாபுரம் பகுதிகளில் ஜிப்சம் மிகுந்துள்ளது. தமிழ்நாட்டின் சிமெண்ட் உற்பத்திக்கான நிலக்கரி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிங்கரேணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குடிசைத் தொழில் ஆகும். ஆவடியிலுள்ள கனரக வண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் போர் டாங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. மேட்டூர் ஆலையில் உற்பத்தியாகும் இரசாயனப் பொருட்கள் காஸ்டிக் சோடா, குளோரின், சலவை சோடா ஆகியவை ஆகும்.
கந்தக அமிலம், சூப்பர் பாஸ்பேட் இவை இராணிப்பேட்டையில் தயாராகும் இரசாயனப் பொருட்கள் ஆகும். தீப்பெட்டித் தொழில் மற்றும் வெடிமருந்துப் பொருள்களுக்குப் பெயர் பெற்ற இடம் சிவகாசி. சென்னைக்கு அருகில் உள்ள மணலியில் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்கூடம் ( Refinery ) உள்ளது. தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் பெட்ரோலிய இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கிறது.
ஈரோடுக்கு அருகிலுள்ள பள்ளிப்பாளையம் என்னும் இடத்தில் காகிதத் தொழிற்சாலை உள்ளது. மூங்கில், வைக்கோல், கரும்புச்சக்கை, சணல் இவை காகிதக் கூழ் தயாரிக்கப் பயன்படுகின்றன.