நுண்ணுயிரியல் அறிமுகம்:

மனித உடலில் கோடிக்கணக்கில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றில் உடலுக்கு நல்லது செய்வதும் உண்டு, கெடுதல் செய்வதும் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் பற்றி இன்று மருத்துவ உலகில் சாதாரணமாய் தெரிந்து வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் உயிரிகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தது. காரணம் அதைப் பற்றி எவரும் சிந்திக்காமல் இருந்தனர். நம்மைச் சுற்றிலும் காற்றில்... நுண்ணுயிரிகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் சுவாசிக்கிறோம்... நம் உடலுக்குச் செல்லும் அவைகள் என்னென்ன செய்கின்றன என்பதைப் பற்றி ஒருவர் அக்காலத்தில் சிந்தித்தார். இதனால் மருத்துவ உலகில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவர்தான் ஆண்டனிவான் லீவன் ஹாக்.

இளமைப் பருவம்:

மனித உடலில் கோடிக்கணக்கில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றில் உடலுக்கு நல்லது செய்வதும் உண்டு, கெடுதல் செய்வதும் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் பற்றி இன்று மருத்துவ உலகில் சாதாரணமாய் தெரிந்து வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் உயிரிகள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தது. காரணம் அதைப் பற்றி எவரும் சிந்திக்காமல் இருந்தனர். நம்மைச் சுற்றிலும் காற்றில்... நுண்ணுயிரிகள் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் சுவாசிக்கிறோம்... நம் உடலுக்குச் செல்லும் அவைகள் என்னென்ன செய்கின்றன என்பதைப் பற்றி ஒருவர் அக்காலத்தில் சிந்தித்தார். இதனால் மருத்துவ உலகில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவர்தான் ஆண்டனிவான் லீவன் ஹாக்.

டெல்ஃபட் என்றொரு நகரம். இது நெதர்லாந்து நாட்டில் இருக்கிறது. அங்கு பிலிப்ஸ் வான்லீவன் ஹாக் என்பவர் தனது மனைவி மார்கரித்தாயோடு வாழ்ந்து வந்தார். ஏழ்மையான குடும்பம். இத்தகைய குடும்பத்தில் 1632 - ஆம் ஆண்டு. அக்டோபர் 24 - ம் தேதி லீவன் ஹாக் பிறந்தார். அவரின் தந்தையார் 'பேஸ்கட்' கூடைகள் செய்து விற்பவர். ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது அவரின் தந்தையார் இறந்தார். குறுகிய காலம் லெய்டனில் பள்ளிப் படிப்பு படித்தவர், குடும்ப வறுமை காரணமாக அவர் தனது மாமா வீட்டிற்குச் சென்றார். அவரை ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். 

படிக்க ஆர்வம் இருந்தும், தந்தையின் இழப்பும், வறுமையும் அவரை சிறுவயதிலேயே பசியை ஆற்ற வேலைக்கு அனுப்பியது காலம். துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்த அவர் துணிகளின் வகைகளை நன்கு அறிந்து வியாபாரம் செய்தார். அவர் காலத்தில் துணிகளில் தைக்கப்படும் தையல்களை எண்ணி தையல் செய்தவருக்கு கூலி கொடுப்பார்கள். தையல்காரர் எத்தனை தையல் போட்டிருக்கிறார் என்பதைக் காண, துணி முதலாளிகள்... தையலின் கணக்கை பார்க்க உருபெருக்கி கண்ணாடியான பூதக்கண்ணாடியை உபயோகப்படுத்தி வந்தார்கள். 

முதலாளிகள் இல்லாத சமயங்களில் அந்த பூதக்கண்ணாடியை எடுத்து துணிகளின் மீது வைத்துப் பார்ப்பார் லீவன் ஹாக்.ஒவ்வொரு தையலும் 'பெரிது பெரிதாக' தெரியவர ஆச்சர்யப்பட்டார். கண்ணாடியையும் ... துணியின் தையலையும் மாற்றி மாற்றி பார்த்தார். கடுகு அளவு தையல்... அதைவிட பத்து மடங்கு தெரிவது குறித்து சிந்தித்தார். 'இக்கண்ணாடியின்' மாயத்தை உணர்ந்த அவர்... அதை வாங்க முயற்சித்தார். வறுமை வாங்க விடவில்லை.

அக்கண்ணாடியை தாமே செய்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தார். எப்படி செய்வது? எங்காவது உடைந்த கண்ணாடிகள் கிடைக்குமா என அலைந்தார். ஒருவர் 'கண்ணாடி'களை உற்பத்தி செய்வதை அறிந்து அவரை அணுகி நிறைய கண்ணாடி குச்சிகளை வாங்கி வந்தார். அவைகளை நொறுக்கி... பின்னர் உருக்கினார். அதை பந்தாக மாற்றினார். அதன் மூலம் ஒரு சிறு எறும்பைப் பார்த்தார் . அது எருமை போலத் தெரிந்தது. மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். பந்து போன்றதை வைத்து எல்லாவற்றையும் பார்க்க முடியாது என்பதை உணர்ந்த அவர் அவற்றை 'தட்டையாக' மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்... 

சிறு சிறு சில்லுகளாக 'கண்ணாடியில்' செய்து அவைகளை ஒன்றின் மீது ஒன்றை வைத்து புதிதாக உருபெருக்கியை உருவாக்கினார். முதலில் தன் சுண்டு விரலை வைத்து பார்த்தார்... சிறு சிறு கோடுகள் பெரிது பெரிதாக தெரிந்தது. இன்றைய உருபெருக்கிக்கான முன்னோடியாக 'லீவன் ஹாக்' உருவாக்கிய உருபெருக்கி அமைந்தது. இந்த உருபெருக்கியைக் கொண்டு என்னென்ன பார்க்கலாம்... என்று சிந்தித்தார்.

கண்டுபிடிப்பு:

ஒருநாள் ஒரு சிறுவனின் வலது புறங்கையில் புண்ணிருந்தது. அவனை அருகில் அழைத்தார். புண்ணின் மேல் உருபெருக்கியை வைத்து பார்த்தார்; புண்ணினுள் சில உயிரிகள் குறுக்கும். நெடுக்குமாக ஓடுவதைக் கண்டார். அவைகள் நுண்ணுயிரிகள் என்பதை உணர்ந்தார். அந்த நுண்ணுயிரிகள்தான் மனித உடலுக்கு நோய்களை கொடுக்கின்றனவாக இருக்குமா? என சிந்தித்தார். 1674 - ஆம் ஆண்டில் நுண்ணுயிரி பற்றிய கருத்தை வெளியிட்டார்; அவரின் கூற்றைக் கேட்டு மருத்துவ உலகம் - 

புதியன உரைத்த அவரை வியந்து பாராட்டியது. மருத்துவ உலகில் புதிய மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்தி இருப்பதாக பல மருத்துவ ஆய்வாளர்கள் பாராட்டினர். புதிய புதிய உருபெருக்கிகளை உருவாக்கியபடியே இருந்தார். சுமார் 250 க்கு மேற்பட்ட உருபெருக்கிகளை உருவாக்கினார். சில உருபெருக்கி வைக்கப்படும் பொருளை விட 270 மடங்கு பெரிதாக காட்டியது. 

பள்ளிப்படிப்பை கூட கடக்காத அவரின் உருபெருக்கி (மைக்ரோஸ்கோபிக்கு) பெரும் வரவேற்பு உண்டானது. அவரின் கண்டுபிடிப்பை அறிந்த மருத்துவ ஆய்வாளர் ஒருவர் அவரை அழைத்து, ஏற்கனவே தான் சேகரித்து வைத்திருந்த தசை துணுக்குகள், மேல் தோல் துண்டுகள்... இவைகளை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவைகளை பார்த்தபோது புதிய உலகமே அவருள் விரிந்தது. தசை துணுக்குகளில்... சிறுவனின் புண்ணில் 'பார்க்காத' நுண்ணுயிரிகளை கண்டார்.... இதனினும் மாறுபட்ட உயிரிகளை தசை துணுக்குகளில் கண்டார். 

'லீவன் ஹாக்'குக்கு மனித உடல் உறுப்புகளில்' காணப்படும் உயிரிகளைப் பற்றி ஆய்வு செய்ய தீவிரமாய் ஈடுபட்டார். பல நுண்ணுயிரிகளைக் கண்ட அவர் புரோட்டோசோவா (Protozoa) என்ற ஓரணு உயிரியை பற்றி கண்டறிந்து கூறினார். இரத்தத்தைப் பற்றி ஆராய்ந்த அவர் 'இரத்த' சிவப்பணுக்களைப் பற்றி பதிவு செய்து கூறினார். மேலும் இரத்தத்தின் அசைவுகளை நுண்ணோக்கியின் மூலம் கண்டு அதிசயித்து, வெளி உலகத்திற்கு கூறினார். அவரின் அறிவியல் பூர்வமான ஆய்வைப் பாராட்டி படித்தவர்க்கு மட்டுமே உறுப்பினர் பதவி கொடுக்கும் ராயல் கழகம் 1680 - ல் அவருக்கும் உறுப்பினர் பதவியைக் கொடுத்து கௌரவித்தது. மனித உடலிலுள்ள நுண்ணுயிரிகளை ஆராய்ந்து, அதன் நன்மை, தீமைகளை மருத்துவ உலகிற்கு அறிவித்தார்.

மறைவு :

இன்று நுண்ணுயிரியல் என்ற தனித் துறையே உலகில் செயல்படுகிறது (படிப்பு மருத்துவம்) என்றால் அதற்கு மூலகாரணம் லீவன் ஹாக் என்ற படிக்காத மேதையின் கண்டுபிடிப்புதான். உருப்பெருக்கியை (மைக்ரோஸ்கோப்) உருவாக்கி அதன் பயன்களை உலகிற்கு அறிவித்ததால் இன்று உயிரிகளால் ஏற்படும் நோய்களின் தன்மையை உணர முடிகின்றது. நுண்ணுயிரிகளின் ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மேதையான லீவன் ஹாக் தன் 90 வது வயதில் 1723 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். மறைந்து 300 ஆண்டுகள் ஆன பின்பும் அவரின் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு உதவுகின்றன என்றால், மாபெரும் சாதனை படைத்த அவரை யாரேனும் மறக்க முடியுமா? இன்று மருத்துவ உலகில் நுண்ணுயிர் துறை மாபெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றால் அத்துறையின் ஆதிகர்த்தாவை என்றென்றும் அவரை நினைப்பதுதான் புண்ணியம்.

Previous Post Next Post